காணாமல் போன கஸ்தூரியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடுகின்றது காவல்துறை

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் பதின்ம வயது சிறுமியைக் கண்டுபிடிக்க, காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகின்றது.

ஈப்போவின் ஜாலான் பாசீர் பூத்தே என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட காயத்திரி என்ற இளம்பெண் காணாமல் போனதை, அன்று காலை 7 மணியளவில் அவரது தந்தை கவனித்தார். அதனைத் தொடர்ந்து, அவரைக் கண்டுபிடிக்க குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டனர், ஆனால் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை. காயத்திரியின் கைத்தொலைபேசியும் வேலை செய்யவில்லை.

காயத்திரி காணாமல் போனது தொடர்பில், அவரது தந்தை 11 ஏப்ரல் 2023 அன்று பாசீர் பூத்தே காவல் நிலையத்தில் புகாரளித்தார் என்று, ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் யஹாயா ஹாசன் கூறினார்.

குறித்த பெண்ணின் இருப்பிடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது அவரைத் தெரிந்தவர்கள் வழக்கின் விசாரணை அதிகாரி சார்ஜென்ட் ரஃபிடா அப்துல் ரஷித்தை 013-7312477 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும், ஈப்போ மாவட்ட காவல்துறை தலைமையகத்தை (IPD) 05-2451500 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here