நள்ளிரவிற்கு பிறகு பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை; போலீசார் தகவல்

நள்ளிரவுக்குப் பிறகு பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலாங்கூர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான், கோம்பாக்கில் பட்டாசு வெடித்து விளையாடும் போது மக்கள் காயமடைவதையும், சாலையில் அவற்றைக் கொளுத்துவதைப் பற்றிய செய்திகளையும் தொடர்ந்து இது நடந்ததாகக் கூறினார்.

பட்டாசு வெடிக்க திறந்த பகுதிகளில் மட்டுமே அனுமதி உண்டு, குடியிருப்பு பகுதிகளில் அல்ல. நள்ளிரவுக்குப் பிறகு பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. குறிப்பாக நள்ளிரவுக்குப் பிறகு இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறுவதாகக் கிடைத்த புகாரின் பேரில் காவல்துறை விரைவாகச் செயல்படும் என்று அவர் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

நள்ளிரவுக்குப் பிறகு பட்டாசு வெடிப்பது சிறு குற்றச் சட்டம் 1955ன் பிரிவு 13ன் கீழ் தண்டனைக்குரியது. வேண்டுமென்றே வெடிப்பை ஏற்படுத்துவது அல்லது உயிருக்கு அல்லது உடமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெடிபொருட்களை சேமித்து வைப்பது வெடிபொருள் சட்டம் 1957 இன் பிரிவு 7 இன் கீழ் தண்டனைக்குரியது.

இது ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது RM10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகள் கண்காணிக்கப்படும் என்றார் உசேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here