கோலாலம்பூர்:
நேற்றிரவு இன்டான் பைடூரி PPR வீட்டுத்திட்ட அடுக்குமாடிக்குடியிருப்பின் அருகிலுள்ள ஈயக்குட்டையில் (lombong ) மூழ்கி ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கபபட்டார்.
கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு செயல்பாட்டு மையத்திற்கு அழைப்பு வந்தததாகவும், உடனே ஜின்ஜாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 16 பேர் கொண்ட செயல்பாட்டுக் குழு இரவு 11.35 மணியளவில் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றதாக ஆபரேஷன்ஸ் கமாண்டர் முகமட் ஹைகல் முகமட் கஸ்ரி தெரிவித்தார்.
பொதுமக்களின் புகாரத்தொடர்ந்து சுமார் 20 வயதுடைய ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதனையடுத்து, குறித்த ஈயக்குட்டைப் பகுதியியைச் சுற்றிலும் மேற்கொண்ட விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கையில், அங்குள்ள பாறையிலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் பாதிக்கப்பட்டவரின் தனிப்பட்ட உடைமைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்டவரின் சடலம் அதிகாலை 1.33 மணியளவில் உறுப்பினர்களால் வெற்றிகரமாகக் மீட்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது ,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.



















