தீவிர உடற்பயிற்சியில் ஜோதிகா…வியந்த ரசிகர்கள்

சூர்யாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் நடிகை ஜோதிகா தனது ரசிகர்களின் தொடர்ச்சி மற்றும் திரைப்பட மார்க்கெட்டை அப்படியே வைத்திருக்கும் ஒரு நடிகை என்றே கூறலாம். கடந்த 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் பெரிய திரைக்கு ரீ-என்ட்ரி கொடுத்த நிலையில், அவர் தொடர்ச்சியாக பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஜோதிகாவும் சூர்யாவும் சமீபத்தில் மும்பையில் ஒரு புதிய வீட்டை அமைத்து தங்கள் குழந்தைகளான தேவ் மற்றும் தியா ஆகியோரின் கல்விக்காக அங்கு சென்றார்கள். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா அடிக்கடி புகைப்படங்களையும். வீடியோக்களையும் வெளியீட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது ஜோதிகா தனது கைகளில் படிக்கட்டுகளில் இறங்குவது மற்றும் சமநிலையை இழக்காமல் பந்து விளையாட்டை விளையாடுவது உள்ளிட்ட நம்பமுடியாத தலைகீழ் உடற்பயிற்சிகளையும் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  மேலும், நடிகை ஜோதிகா தற்போது மம்முட்டிக்கு ஜோடியாக ‘காதல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவர் தனது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/Crkp7BPv16F/?utm_source=ig_embed&ig_rid=a7c21cca-6a00-478c-bce6-ba56cd4d3f2a

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here