கிளாந்தான் பகுதிகளுக்கு சர்க்கரை விநியோகம் வழமைக்கு திரும்பியது என்கிறார் சலாவுதீன்

ஜோகூர் மற்றும் பினாங்கில் உள்ள MSM மலேசியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சர்க்கரை ஆலைகள் தற்காலிகமாக மூடப்பட்டதால், தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சர்க்கரை விநியோகப் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், தற்போது அவை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் அயூப் கூறினார்.

நோன்புப்பெருநாளை முன்னிட்டு குறித்த சக்கரைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஏப்ரல் 25 அன்று மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.மேலும் சர்க்கரை உற்பத்தியாளர்களான MSM மலேசியா ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் மத்திய சர்க்கரை சுத்திகரிப்பு ஆலை ஆகியவற்றுடன் அமைச்சகம் நெருக்கமாக செயல்பட்டு, விநியோகத்தை வழமையான ஓட்டத்திற்கு மீட்டெடுக்கிறது என்று, இன்று செவ்வாய்கிழமை (மே 2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

“பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சர்க்கரையின் விலை அதிகரிக்கலாம் என்ற கூற்றுக்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வசிப்பவர்கள் பீதியடைய மாட்டார்கள் மற்றும் ஏமாற்றப்பட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார். மேலும் நாளை புதன்கிழமை (மே 3) முதல் சர்க்கரை இருப்புக்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.

கிளாந்தானில் வசிப்பவர்கள் ஏப்ரல் 22 முதல் மாநிலத்தில் சர்க்கரை பற்றாக்குறை இருப்பதாகக் கூறிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here