ஜோகூர் Maqis சுல்தான் அபுபக்கர் வளாகத்தில் 820 கிலோ சேறு கலந்த தாமரை வேர்கள் பறிமுதல்

இஸ்கந்தர் புத்ரி சுல்தான் அபுபக்கர் வளாகத்தில் (KSAB) மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறை (Maqis) சேற்றால் மாசுபடுத்தப்பட்ட மொத்தம் 820 கிலோ தாமரை வேர்களைக் கைப்பற்றியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து காய்கறிகளை ஏற்றிச் சென்ற லோரியை சனிக்கிழமை (மே 6) மதியம் 2.50 மணியளவில் சோதனை செய்யப்பட்டதாக ஜோகூர் மாகிஸ் இயக்குநர் முகமட் புத்ரா முகமட்  யூசோப் தெரிவித்தார்.

தொடர்ந்து சோதனையில், 1,060 கிலோ தாமரை வேர்களைக் கண்டறிந்தோம். அவற்றில் 820 கிலோவில் சேறு கலந்திருந்தது. சுமார் 7,000 ரிங்கிட் மதிப்புள்ள சேற்று தாமரை வேர்களின் 82 பெட்டிகள் சுத்தமான காய்கறிகள் அடங்கிய மற்ற பெட்டிகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை (மே 7) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாமரை வேர்கள் மேலதிக நடவடிக்கைக்காக கைப்பற்றப்பட்டுள்ளன.

பூச்சிகள், நோய்கள் அல்லது அசுத்தங்கள் அடங்கிய எந்தவொரு விவசாயப் பொருட்களையும் இறக்குமதி செய்வது மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் சட்டம் 2011 (சட்டம் 728) பிரிவு 14 (a) இன் கீழ் குற்றமாகும் மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 14 இன் கீழ் தண்டனைக்குரியது என்று அவர் கூறினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளி அதிகபட்சமாக RM100,000 அபராதம் அல்லது ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். நாட்டில் உள்ள அனைத்து நுழைவுப் புள்ளிகளிலும் நாங்கள் எங்கள் அமலாக்கத்தையும் கண்காணிப்பையும் தொடர்வோம்.

மலேசியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் விவசாய பொருட்கள், தாவரங்கள், விலங்குகள், சடலங்கள், மீன் மற்றும் நுண்ணுயிரிகள் பூச்சிகள், நோய்கள் மற்றும் மாசுபாட்டின்றி இருப்பதை உறுதி செய்வதற்காக இது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here