நோம் பென்: 2023 சீ விளையாட்டுப் போட்டியின் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஷெரீன், உமர் ஜோடி தங்கப் பதக்கத்தை பெற்று நாட்டிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் பெருமையும் சேர்த்துள்ளனர்.
தேசிய ஓட்ட வீராங்கனையான ஷெரீன், வியட்நாமிய ஓட்டப்பந்தய வீரர்களான Nguyen Thi Huyen (53.27s) மற்றும் Nguyen Thi Hang (53.84s) ஆகியோருடன் கடுமையான சவால்களை தவிடுபொடியாக்கி, தடகளப் போட்டியில் தந்து இரண்டாவது தங்கத்தை வென்றார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஆண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் இரண்டு பிலிப்பைன்ஸ் வீரர்களான உமாஜெஸ்டி வெஸ்லி லச்சிகா வில்லியம்ஸ் மற்றும் ஃபிரடெரிக் கபாட்டு ரமிரெஸ் ஆகியோரை வீழ்த்தி தேசிய ஓட்ட வீரர் உமர், தங்க பதக்கத்தை வென்றார்.
2001 கோலாலம்பூர் விளையாட்டுப் போட்டிகளில் ஜாஃப்ரில் சுஸ்லைனிக்குப் பிறகு, SEA விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 400மீ ஓட்டப்போட்டியில் தங்கம் வென்ற மலேசிய ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையையும் உமரையே சாரும்.