சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 11,000 கிலோவுக்கும் அதிகமான அலங்கார செடிகள் பறிமுதல்

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட132,000 ரிங்கிட் மதிப்புள்ள சுமார் 11,036 கிலோ எடையுள்ள அலங்காரச் செடிகள் ஜோகூரின், தஞ்சோங் பெலேபாஸ் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை (மே 9) காலை 11.18 மணியளவில் ஜோகூர் மக்கிஸ் உறுப்பினர்கள் இந்த பொருட்களை கைப்பற்றினர்.

ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் ” 17 வகையான அலங்காரச் செடிகளை இறக்குமதி செய்தவர் செல்லுபடியாகும் இறக்குமதி அனுமதிகளை கட்ட தவறியதாக” என்று ஜோகூர் மக்கிஸ் இன்று (மே 10) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 11(1) இன் கீழ் எந்தவொரு விவசாயப் பொருட்களையும் இறக்குமதி அனுமதியின்றி இறக்குமதி செய்வது குற்றமாகும், மேலும் அதே சட்டத்தின் பிரிவு 11(1) இன் கீழ் அது தண்டனைக்குரியது.

இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளி RM100,000க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஆறு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here