டீசலுக்கான மானியம் நீக்கம் பள்ளி, விரைவு மற்றும் சுற்றுலா பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்படக் கூடாது – அந்தோனி லோக்

DAMANSARA SEPTEMBER 5 2023 - Interview with Minister of Transport Anthony Loke. Photo by Zahid Izzani

ஜார்ஜ் டவுன்:

டீசலுக்கான மானியம் நீக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள் மற்றும் சுற்றுலா பேருந்துகளை நடத்துபவர்கள் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து டீசலுக்கான மானியம் வழங்கப்படுவதால் அவர்கள் பேருந்து கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்று அவர் கூறினார்.

பள்ளி, விரைவு மற்றும் சுற்றுலா பேருந்துகள் இயக்குபவர்களுக்கு ஒரு லிட்டர் டீசல் 1.88 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் டீசல் மானியத்தைக் காரணம் காட்டி பள்ளிப் பேருந்து அல்லது விரைவுப் பேருந்து கட்டணத்தை அவர்கள் உயர்த்தக் கூடாது என்று அவர் சொன்னார்.

மேலும் விரைவுப் பேருந்துகளுக்கு, தரைவழிப் போக்குவரத்து முகமையின் (APAD) மேற்பார்வையில் இருப்பதால், அவர்கள் தங்களின் விருப்பப்படி கட்டணத்தை உயர்த்த முடியாது என்று அவர் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here