நெடுங்கால உயர்கல்வி இலக்கினைக் குறிவைக்கும் Nottingham University

2025ஆம் ஆண்டிற்குள் 205,000 மாணவர்கள் கொண்ட அனைத்துலக உயர்கல்வி மையமாக உருமாற வேண்டும் என்ற தேசிய விருப்பத்திற்கு ஏற்ப மலேசியாவின் University of Nottingham பல்கலைக்கழகம் நாட்டில் மேலும் முதலீடு செய்கிறது.

குறிப்பாக பெட்டாலிங் ஜெயாவில் மாணவர்களின் எதிர்காலத்திற்கான கல்வி மையத்தை தொடங்குவதன் மூலம் உயர்கல்வி தேவைகளையும் வசதிகளையும் அந்த பல்கலைக்கழகத் தரப்பு எளிதாக்குகின்றது.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மெனாரா ஆக்ஸிஸ்-இல் அமையும் இந்த மையத்தை பிரிட்டன் தூதரகத்தின் மலேசிய துணை இயக்குநர் பிரான்ஸின், மாலத்தீவு துணை ஹை கமிஷனர் சோபா, University of Nottingham பல்கலைக்கழகத் தலைமை நிர்வாக அதிகாரி இஷாடின் டாவுட் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.

இந்நிலையில் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி கண்டு வரும் நிலப்பரப்பில் நம் மாணவர்களை எவ்வாறு மேம்படுத்துகிறோம் என்பது அவசியமாகின்றது. இந்த பல்கலைக்கழகம் இதை மிகப் பெருமையுடன் சுமக்கும் பொறுப்பாகும். அனைத்துலக கல்வி மயமாக உருமாறும் லட்சியத்தை ஆதரிக்க ஒரு கூட்டு அணுகுமுறை அவசியம் என நாங்கள் நம்புகின்றோம். எங்கள் பல்கலைக்கழகமும் இதனை அங்கீகரிக் கின்றது என அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சோபா கருத்துரைத்தார்.

இந்நிலையில் மலேசிய கல்வி புளூபிரிண்ட் திட்டத்துடன் உயர்கல்விக்கான தேவை களை இந்த மாணவர் மையம் பூர்த்தி செய்கின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here