கடத்தப்பட்டதாக நம்பப்படும் RM35,000 மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் ; இருவர் கைது

ஜோகூரின் பக்கிரியில் RM35,780.25 மதிப்பிலான வரி செலுத்தாமல் மதுபானம் கடத்தியதாக நம்பப்படும் இரண்டு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

40 மற்றும் 48 வயதுடைய சந்தேக நபர்கள் கடந்த வியாழன் (மே 4) மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக மூவார் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் முக்லிஸ் அஸ்மான் தெரிவித்தார்.

“காவல்துறையினர் பக்ரி பகுதியில் ரோந்து செல்லும் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட வெள்ளை நிற தோயோத்தா ஆல்பர்டின் ஓட்டுநரை தமது உறுப்பினர்கள் பின்தொடர்ந்தனர்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

விசாரணைக்கு உதவ சந்தேக நபர்கள் மே 5 முதல் மே 9 வரை ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக ஏசிபி முக்லிஸ் அஸ்மான் கூறினார்.

இந்த வழக்கு சுங்கச் சட்டம் 1967 பிரிவு 135 (1)ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் வெளி தரப்பினரின் தலையீடு இல்லை என்று மறுத்த அவர், தற்போதுள்ள நடைமுறைகளின் அடிப்படையில் விசாரணை வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

“மூவார் மாவட்டத்தில் ஏதேனும் கடத்தல் நடவடிக்கைகள் குறித்த தகவல் உள்ளவர்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும், சரிபார்க்கப்படாத செய்திகள் அல்லது ஆதாரங்களை நம்ப வேண்டாம் என்றும் நான் அறிவுறுத்த விரும்புகிறேன்” என்று ஏசிபி முக்லிஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here