நியூசிலாந்து கடலில் எரிசக்தி இன்றி தத்தளிக்கும் சிங்கை கப்பல்

சிங்­கப்­பூ­ரில் பதி­வு­செய்­யப்­பட்ட கொள்­க­லன் கப்­பல் ஒன்று நேற்று காலை எரிசக்­தியை இழந்து நியூ­சி­லாந்து கடற்­ப­ரப்­பில் மிதக்­கத் தொடங்­கி­ய­தால் அவசரகால உதவி கோரி­யுள்ளது. ஓராண்­டுக்­குள் மூன்­றா­வது முறை­யாக அக்கப்­பல் செய­ல் இழந்துள்­ளது.

66,000 டன் எடை­யுள்ள ஷிலிங் என்ற அந்­தக் கப்­பலை பாது­காப்­பான இடத்­திற்கு இழுத்­துச் செல்ல நியூ­சி­லாந்து அதி­கா­ரி­க­ள் மீட்பு முயற்­சி­களை மேற்கொண்டுள்­ள­னர்.

சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று மாலை 4 மணிக்கு, கப்­பல் தெற்­குத் தீவின் கடற்கரை­யில் காணப்­பட்­ட­தாக கப்­பல் கண்­கா­ணிப்பு சேவை­யான மரின் டிராஃபிக் தெரி­வித்து.

24 ஊழியர்­க­ளைக் கொண்ட கப்­ப­லு­டன் தொடர்­பில் இருப்­ப­தா­க­வும், கப்­பலை இழுத்து வர உள்­ளூர் நேரப்­படி மாலை 6 மணி­ய­ள­வில் (சிங்­கப்­பூர் நேரப்­படி மதி­யம் 2 மணி) இழு­வைக் கப்­பல் சென்­ற­தா­க­வும் நியூ­சிலாந்­தின் கடல்­துறை பாது­காப்பு ஆணை­ய­மான ‘மரின்­டைம் நியூ­சி­லாந்து’ கூறி­யது.

சிங்­கப்­பூ­ரைத் தள­மா­கக்­கொண்ட கப்­பல் சேவை நிறு­வ­ன­மான டிபி வேர்ல்­டின் ஃபீடர்­டெக்­கிற்கு சொந்தமான இக்­கப்­பல் 2005ல் தயா­ரிக்­கப்­பட்­டது.

தெற்­குத் தீவின் குறு­கிய மணல் குன்­றான ஃபேர்வெல் ஸ்பிட்­டி­லி­ருந்து 22 கடல் மைல் தொலை­வில் கப்­பல் எரி­சக்­தியை இழந்­த­தால், பல ஹெலி­காப்­டர்­களும் ஒரு விமா­ன­மும் அந்த இடத்­திற்கு அனுப்­பப்­பட்­டன என்று நியூ­சி­லாந்து ஹெரால்டுக்கு நியூ­சி­லாந்து பாது­காப்­புப் படை­யின் செய்­தித் தொடர்­பா­ளர் அளித்த பேட்­டி­யில் கூறி­னார்.

அப்­போது கப்­பல் நியூ­சி­லாந்­தில் இருந்து சிங்­கப்­பூர் நோக்கி திரும்பிக்கொண்டிருந்­தது.

“எரி­சக்­தியை இழந்த பின்னர் கப்­பல் கட­லில் தள்­ளா­டு­கிறது,” என்றார் அவர். இழுவைக் கப்பல் செல்வ தற்கு முன்னதாக அது கரை யொதுங்கும் அபாயம் இல்லை என்று அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here