நேற்று புதன் கிழமை (மே 17) பிற்பகல் 3.30 மணியளவில் பெரங்கான், கம்போங் பாடாங் மெங்குவாங் என்ற இடத்தில் புயல் காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன.
இதில் பாதிக்கப்பட்ட அம்பாக் முகமட், 79, என்பவர் கூறுகையில் அவரும் மற்ற மூன்று குடும்ப உறுப்பினர்களும் மதிய உணவுக்குப் பிறகு வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென பலத்த காற்று அவரது வீட்டுக் கூரையின் ஒரு பகுதி அடித்துச் சென்றது, இதனால் கூரையின் பெரும்பகுதி கிழிந்தது.
“அப்போது மழை பெய்யவில்லை, ஆனால் காற்று பலமாக இருந்தது, பலத்த சத்தம் பயமாக இருந்தது, எங்கள் மீது கூரை விழுந்து விடுமோ என்ற பயமாக இருந்ததாக” அவர் கூறினார்.
இதற்கிடையில், ஐந்து பெரிய கூடாரங்கள் காற்றால் அடித்துச் செல்லப்பட்டதால், திரெங்கானு மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனமான டிடிஎம் பெர்ஹாட், மாராங் மாவட்ட சமூகத்தினருடன் நாடக்கவிருந்த நோன்புப்பெருநாள் திறந்த இல்லத்திற்கான ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்டன என்றார்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படாததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சுலைமான் மேலும் கூறினார்.









