அனுமதியின்றி பள்ளி வேன் சேவையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று ஓட்டுநர்கள் கைது

அனுமதியின்றி பள்ளி வேன் சேவையில் ஈடுபட்ட குற்றத்திற்காக மூன்று ஓட்டுநர்களை கைது செய்துள்ளதாக நெகிரி செம்பிலான் சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சிரம்பான் மாவட்டத்தில், அனுமதியின்றி அரசு பள்ளி வேன் சேவைகளை இயக்கிய தனியார் வேன்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாட்கள் சிறப்பு அமலாக்கத்தின் விளைவாக, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 23 (2) இன் கீழ், அம்மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று, நெகிரி செம்பிலான் ஜேபிஜே இயக்குனர் ஹனிஃப் யூசப்ரா யூசுப் கூறினார்.

இந்த நடவடிக்கையில் மொத்தம் ஏழு வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு, மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. “என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கான பயணம் சீராகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்ய பள்ளி வேன் சேவையை அல்லது அனுமதிப்பத்திரம் உள்ள பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here