கார் பள்ளத்தில் விழுந்ததில் 12 வயது சிறுவன் பலி; 3 பேர் காயம்

ரொம்பின் பண்டார் 15 மெலாத்திக்கு அருகில் உள்ள பஹாவ் – கெராதோங் நெடுஞ்சாலையில், அவர்கள் பயணித்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

அதிகாலை 3.20 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் கெரடோங் 6 ஃபெல்டா குடியிருப்பைச் சேர்ந்த முஹம்மது ராசிக் ரம்லி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தின் போது காயமடைந்தவர்களில் பெரோடுவா மைவியின் ஓட்டுநரும் அடங்குவர்.

பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி சுல்ஃபாட்லி ஜகாரியா கூறுகையில், விபத்து குறித்து துறைக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததும், முவாத்சம் ஷா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து எட்டு மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

2 மீ ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்த காரில் இறந்தவர் உட்பட நான்கு பேர் இருந்ததாக மீட்புக் குழுவை வழிநடத்தும் தளபதி தெரிவித்தார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here