ஆங்­கி­லம் தெரி­யாத பயணிகளை அவமதித்த 3 விமானப் பணிப்­பெண்­கள் பணி நீக்கம்- கேத்தே பசி­பிக் ஏர்­வேஸ் நிறு­வ­னம்

ஆங்­கி­லம் தெரி­யாத பய­ணி­க­ளி­டம் பார­பட்­ச­மாக நடந்து கொண்டது மற்றும் அவர்களை அவமதித்ததற்காக, மூன்று விமானப் பணிப்­பெண்­களை கேத்தே பசி­பிக் ஏர்­வேஸ் நிறு­வ­னம் பணி நீக்­கம் செய்­துள்­ளது.

பாதிக்­கப்­பட்ட பய­ணி­கள் புகார் அளித்­த­தைத் தொடர்ந்து நிறு­வ­னம் குறித்த ஊழி­யர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்து உள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்கிழமை சீனா­வின் தென்­மேற்கு நக­ர­மான செங்­டு­வி­லி­ருந்து ஹாங்­காங் சென்ற சிஎக்ஸ்-987 விமா­னத்­தில் பய­ணம் செய்த பய­ணி­களுக்கு ஏற்­பட்ட அனு­ப­வம் குறித்து மிக­வும் வருந்­து­வ­தாக விமான நிறு­வ­னத்­தின் நிர்வாகம் தெரி­வித்­தது. இதற்­காக மன்­னிப்­புக் கேட்­டுக் கொள்­வ­தா­க­வும் அது கூறி­யது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here