வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி மனநலம் குன்றிய ஒருவர் உயிரிழப்பு

ரவாங்கிலுள்ள தாமான் தேசா கன்ட்ரி ஹோம்ஸில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.

இன்று சனிக்கிழமை (மே 27) காலை 6.28 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர், வான் முகமட் ரசாலி வான் இஸ்மாயில் கூறுனார்.

“பத்து அராங் மற்றும் ரவாங் தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 13 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

“அவர்கள் காலை 6.36 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து, இரண்டு மாடி வீட்டின் தரை தளத்தில் தீ ஏற்பட்டதைக் கண்டறிந்தனர், ஆனால் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ பொதுமக்களால் அணைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

தீ மீண்டும் எரியாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பணியாளர்கள் வீட்டை பரிசோதனையிட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் முதியவர் ஒருவர் தனது மனநலம் குன்றிய சகோதரருடன் குறித்த வீட்டில் வசித்து வருவது முதல்கட்ட சோதனையில் தெரியவந்தது.

“56 வயதான மனநலம் குன்றிய நபரின் எரிந்த உடலை நாங்கள் வீட்டின் கீழ் அறை ஒன்றில் கண்டோம்,” என்று அவர் கூறினார், அவருடைய 65 வயதான மூத்த சகோதரர் காயமின்றி தப்பினார்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட சேதங்கள் தற்போது விசாரணையில் உள்ளன என்று வான் முகமட் ரசாலி கூறினார்.

“உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here