சேவல் சண்டையில் தகராறு; 7 பேர் கைது

கோத்த கினபாலு: கம்போங் புங்கா ராயா, கெபாயன் என்ற இடத்தில் சேவல் சண்டைக் குழியில் நேற்று நடத்திய சோதனையில் சூதாட்டக்காரர்கள் என சந்தேகிக்கப்படும் ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர். மதியம் 12.30 மணியளவில் நடந்த இந்த நடவடிக்கையின் போது, பந்தயம் கட்டியதாக நம்பப்படும் ஐந்து சண்டை சேவல்களையும் RM1,500 ரிங்கிட்களையும் கைப்பற்றியதாக மாவட்ட போலீஸ் தலைமை உதவி கமிஷனர் முகமட் ஜைதி அப்துல்லா தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் அந்த இடம் சூதாட்ட நடவடிக்கைகளுக்கும் சேவல் சண்டைக்கும் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

30 மற்றும் 55 வயதுடைய சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைக்காக கோத்த கினபாலு மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1952ன் பிரிவு 3(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here