பிடோரில் உள்ள ஒரு பழைய தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நம்பப்படும் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு

இன்று (மே 29) பிடோரின் கம்போங் கோல்ட்ஸ்ட்ரீமில் உள்ள பழைய செயலிழந்த தொழிற்சாலையில், மின்சாரம் தாக்கி இறந்ததாக நம்பப்படும் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

40 வயது மதிக்கத்தக்க ஆடவரின் சடலம் குறித்து காலை 11.30 மணியளவில் அழைப்பு வந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர், முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் கூறினார்.

“சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மின்சாரம் தாக்கி இறந்ததாக நம்பப்படும் பாதிக்கப்பட்டவரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர், ஆனால் சாடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

மேலும் “பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் இன்னும் மின்சாரம் பாய்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது, அத்தோடு தாம் தெனகா நேஷனல் பெர்ஹாட்டின் உதவியைக் கோருவதாகவும் ,” அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here