பணியிட மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: முதலாளிமார்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்!

கோலாலம்பூர்:

பணியிட மன ஆரோக்கியத்திற்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று, மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (MEF) வலியுறுத்தியுள்ளது.

தொற்றுநோய்க்குப் பின்னர், பணியாளர்களிடையே, மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இது, உற்பத்தித்திறன், பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதில், கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று, MEF எச்சரித்துள்ளது.

இதனிடையே, கூட்டமைப்பின் தலைவர் Datuk Dr Syed Hussain Syed Husman கூறுகையில், உள்நாட்டு நிபுணர்களின் பற்றாக்குறை, மனநலக் குறைபாடு குறித்த பயம் மற்றும் தெளிவான தேசிய வழிகாட்டுதல்கள் இல்லாதது போன்ற சவால்கள், குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SME)ப் பாதிப்பதாகக் கூறினார்.

பணியிடத்தில், மன ஆரோக்கியத்தைக் கவனிக்க, ஒரு தேசியக் கொள்கை, ஆலோசனை சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் மற்றும் மன அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய, மேலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற, நடவடிக்கைகளையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

அதிக வேலைச்சுமை, சாத்தியமற்ற வேலை அடைவு நிலை எதிர்பார்ப்புகள், வேலை பாதுகாப்பு இல்லாதது, நிதி நெருக்கடி போன்றவை, மன அழுத்தத்திற்கான முக்கிய காரணங்களாகும்.

குறிப்பாக, இளைய மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பணியாளர்கள், இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இலகுவான, வேலை நேரங்கள், உள் கொள்கைகள், ஆலோசனைக்கான அணுகல் மூலம், ஆதரவான சூழலை உருவாக்க, முதலாளிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மன ஆரோக்கியத்தில் முதலீடு செய்வது, பணியாளர்களின் கவனம், விசுவாசம் மற்றும் பணியாளர் நிலைத்தன்மையை மேம்படுத்தும் எனவும் MEF நம்புகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here