விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல்

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு அனுமதி மறுத்து மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் இந்த போராட்டம் காரணமாக ஒரு தரப்பினர், கோவிலுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு வருவாய் கோட்டாசியர் சீல் வைத்துள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், பட்டியலின மக்களை கோவிலுக்கு அனுமதிக்க முடியாது என்று மாற்று சமூகத்தினர் கூறிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து மேல்பாதி கிராமத்தில் வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here