உணவில் இருந்தது எலியின் தலையா இல்லை வாத்தின் கழுத்தா..? ; சீனாவில் சர்ச்சை

சீனாவின் நான்சாங் நகரில் இருக்கும் ஒரு கல்வி நிலையத்தின் உணவுக் கடையில் மாணவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் எலியின் தலை இருந்ததாகக் கூறப்படுகிறது.

அது எலியின் தலை அல்ல, வாத்தின் கழுத்து என்று அக்கடை வெளியிட்ட தகவல் சீனாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீன சமூக ஊடகமான வீபோவில் இச்சம்பவம் குறித்த பதிவு புதன்கிழமை நிலவரப்படி 310 மில்லியனுக்கும் அதிகமானோரால் பகிரப்பட்டுள்ளது.

ஜியாங்ஸு பலதுறைத் தொழிற்கல்லூரியில் குறித்த சம்பவம் நிகழ்ந்ததாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இது குறித்த பதிவுகள் ஜூன் மாதம் ஒன்றாம் தேதியன்று சீன சமூக ஊடங்களில் இடம்பெற்றன.

தவறு ஏதும் நிகழவில்லை என்று மூன்றாம் தேதியன்று கல்லூரி கூறியது.

உணவில் இருந்தது வாத்தின் தலை என்று உள்ளூர் உணவுப் பாதுகாப்பு அமைப்பு நடத்திய முதற்கட்ட விசாரணையில் மறுநாள் தெரிய வந்தது. எனினும், சம்பந்தப்பட்ட கல்வி நிலையத்தில் வழங்கப்படும் எல்லாவகை உணவுகளும் சோதித்துப் பார்க்கப்படும் என்றும் அது தெரிவித்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here