தொடரும் சாலை தகராறு; பெண் ஓட்டுநரை தாக்கியதாக மற்றொரு ஆடவர் பினாங்கில் கைது

பாலேக் பூலாவ், ஜாலான் பெர்மாத்தாங் டாமர் லாவூட் என்ற இடத்தில் வியாழக்கிழமை நடந்த சம்பவத்தில் பெண் ஓட்டுநரை தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக 32 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நேற்று கைது செய்யப்பட்டதாக பாராட் தயா மாவட்ட காவல்துறைத் தலைவர்  கமருல் ரிசல் ஜெனால் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய பெண் ஓட்டுநடன் அந்த நபர் அதிருப்தியில் இருந்தார். இதனால் அந்த பெண்ணை ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார்.

அந்த நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 324 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் ஏதேனும் தகவல் தெரிந்தால் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 04-866 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில், பெண் ஓட்டுநரை ஹெல்மெட்டால் தாக்கும் முன், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் வன்முறையில் ஈடுபட்டதைக் காட்டும் 14 வினாடி வீடியோ கிளிப் வைரலானது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here