புதிய பொது செயலாளராக அஹ்மத் மஸ்லான் தேர்வு

பெட்டாலிங் ஜெயா: பாரிசன் நேஷனல் மற்றும் முஃபாக்கட் நேஷனல் ஆகியவற்றின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதை டத்தோ ஶ்ரீ அஹ்மத் மஸ்லான் உறுதிப்படுத்தியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (ஜன. 5) பாரிசான் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டான் ஸ்ரீ அன்வார் மூசாவுக்கு பதிலாக பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினராக  இருக்கும் அஹ்மத் மஸ்லான் நியமிக்கப்படுவார்.

கெட்டெரே அம்னோ பிரிவுத் தலைவரும் கூட்டரசு பிரதேச அமைச்சருமான அன்னுவார் பதவி நீக்கம் செய்யப்பட்டதை பாரிசான் தலைவரும் அம்னோ தலைவருமான டத்தோ ஶ்ரீ  அஹ்மத் ஜாஹிட் ஹமிடி  உறுதிப்படுத்தினார்.

பெரிகாத்தான் நேஷனல், அதாவது பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவுடன் கட்சி தொடர்ந்து பணியாற்ற வேண்டுமா என்று அம்னோ உயர் தலைவர்களும் பிரிவுத் தலைவர்களும் பிளவுபட்டுள்ளதால், அம்னோ ஒரு எழுச்சியை எதிர்கொண்டதால், அனுவார் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பெரிகாத்தான் அரசாங்கத்தின் அங்கக் கட்சிகளுடன் அம்னோ ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை அன்னுவார் குறைக்கூறியதாக கருதப்பட்டது. அது ஒரு ஆதிக்க மலாய் கட்சியாக இருப்பதை உறுதி செய்ய அம்னோ தனது தனி வழியில் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here