பாஸ் கட்சில் இணைந்தார் நடிகர் ஈஸ்லான் யூசூப்; மேலும் பல முக்கிய நபர்கள் இணைவார்கள்- தக்கியுடின் நம்பிக்கை

மலேசிய நடிகரும் இயக்குனருமான டத்தோஸ்ரீ ஈஸ்லான் யூசோப் பாஸ் கட்சியில் இணைந்ததை பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈஸ்லான் யூசோப்பின் இந்த இணைவினைத் தொடர்ந்து, பல குறிப்பிடத்தக்க நபர்கள் PAS இல் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களின் பெயர்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தக்கியுடின் கூறினார்.

நேற்று சிரம்பானில் நடைபெற்ற மஜ்லிஸ் செராமா பெர்டானா கெலோம்பாங் கெபாங்கிடான் ராக்யாட் நிகழ்வைத் தொடர்ந்து, “ஈஸ்லான் இப்போது அதிகாரப்பூர்வ உறுப்பினராக பாஸ் கட்சியில் இணைந்துள்ளார்” என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு மாதமும் சுமார் 3,500 முதல் 4,000 புதிய உறுப்பினர்களை PAS வரவேற்கிறது என்று தக்கியுடின் கூறினார்.

“டான்ஸ்ரீ அன்னுார் மூசா தலைமையிலான குழு உட்பட 3,000 க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களைப் பெற்றுள்ளோம், மேலும் மாநில அளவில் மேலும் குழுக்கள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here