திருநங்கைகளுக்கு உரிமைகள் வழங்காத “இரண்டாவது மோசமான நாடு” மலேசியா..! – வெளியான அதிர்ச்சி தகவல்

திருநங்கைகளின் தொடர்பான பிரச்சினைகளில் மலேசியா உலகின் இரண்டாவது மோசமான நாடாகக் கருதப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ஆய்வின் அடிப்படையில் உலக திருநங்கையர் உரிமைக் குறியீடு மலேசியாவிற்கு -105 மதிப்பெண் மற்றும் F தரம் – அதாவது மிக உயர்ந்த ஆபத்து நிறைந்து என்ற மதிப்பீட்டை வழங்கியது கவலைக்குரியது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விவரித்தார்.

இருப்பினும், இவ் அறிக்கை வெளியிடப்பட்டதில் சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்று அஹ்மட் ஃபத்லி ஷாரி (PN-Pasir Mas) கூறினார்.

” திருநங்கைகளின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் கயானாவுக்கு அடுத்தபடியாக மலேசியா இரண்டாவது மோசமான நாடாகத் திகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.

2020ஆம் ஆண்டுக்கான மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகம்) ஆண்டறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த நிலையில், சவூதி அரேபியா, மலாவி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE ) என்பன முறையே மூன்றில் இருந்து ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here