லுமூட் ஹெலிகாப்டர் விபத்து; நாட்டிற்கு பேரிழப்பு -பிரதமர்

பெட்டாலிங் ஜெயா:

இன்று (ஏப்ரல் 23) காலை லுமூட்டில் ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஏழு பணியாளர்களை ஏற்றிச் சென்ற HOM ஹெலிகாப்டர் (M503-3) லுமூட்டின் TLDM ஸ்டேடியத்தின் படிக்கட்டுகளில் விழுந்து நொறுங்கியது, அதே நேரத்தில் மூன்று பணியாளர்களை ஏற்றிச் சென்ற Fennec ஹெலிகாப்டர் TLDM விளையாட்டு வளாகத்திலிருந்த நீச்சல் குளத்தில் விழுந்து நொறுங்கியது.

“இந்த இதயத்தை உலுக்கும் சோகமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த பேரிடரை எதிர்கொள்ளும் வலிமை பெற பிரார்த்திக்கிறேன் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here