தண்டவாளத்தின் குறுக்கு கம்பிகள் சரிவர மூடாததே கார் – ரயில் மோதலுக்கு காரணம் என்கிறது போலீஸ்

பாபர், ஜாலான் பெருமாஹான் கம்போங் அனாக் கிணருட்டின் 21.5 ஆவது கிலோமீட்டரில், நேற்று கார் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதற்கு தண்டவாளக் குறுக்கு கம்பிகளில் ஏற்பட்ட கோளாறே காரணம் என நம்பப்படுகிறது.

எவ்வாறாயினும், மாலை 6.08 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பெரொடுவா ருசா கார் ஓட்டுநருக்கு ,42, தலையில் கீறல் ஏற்பட்டுள்ள நிலையில், அதில் பயணித்த மூவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

குறித்த ரயில் செம்புலன் ரயில் நிலையத்தில் இருந்து பியூஃபோர்ட் நோக்கி பயணித்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக பாபர் மாவட்ட காவல்துறை தலைவர், துணை கண்காணிப்பாளர் கமருடின் அம்போ சக்கா தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்தபோது, கார் ரயில் பாதையில் திடீரென நின்றது.

ரயில் ஓட்டுநர் அந்த இடத்தை நெருங்கும் போது சிக்னல் ஹார்னை அடித்து, பிரேக் பிடிக்க முயன்று தோல்வியடைந்து பின்னர் காரில் மோதியதாக அவர் கூறினார். மேலும் “ரயில் ஓட்டுநர் சுமார் 20 மீட்டர் தூரத்தில்தான் கார் இருப்பதை கவனித்ததாக நம்பப்படுகிறது

“காரில், நான்கு ஆண்கள் இருந்தனர், அவர்கள் அனைவரும் மோதுவதற்கு முன் வாகனத்தை விட்டு வெளியேறினர்.“ஓட்டுநர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றபோது காயமடைந்தார்,” என்றார்.

கார் ரயில் தண்டவாளத்தில் சென்றபோது, ​​திடீரென வாகனத்தின் என்ஜின் நின்றுபோனதால், கார் நகர முடியாத நிலை ஏற்பட்டது. இது தண்டவாளக் கம்பிகள் கீழே வந்து பாதையை மூடாததால் வந்தது என்றார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 337ன் படி விசாரணை இன்னும் தொடர்கிறது என்று கமருடின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here