பகுயோ நகரின் தூய்மைப் பணிகள் தரத்தை உயர்த்துவதற்கு மும்முனை கூட்டமைப்பு.

Indah Water Konsortiam (IWK) Sdn. Bhd. ஆசியா மேம்பாட்டு வங்கி (ADB,)பகுயோ மாநகர் அரசாங்கம் ஒன்றிணைந்து அந்த நகரில் கழிவுநீர் தூய்மைப்படுத்துதல் மேலாண்மை நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு முன்னெடுப்புகளை மேற்கொள்கின்றன.பகுயோ பிலிப்பைன்சில் உள்ள ஒரு நகரமாகும். இந்நிலையில் ADB Water Organizations Partnership for Resilience Program (WOP4R) திட்டத்தின் கீழ் மும்முனை கூட்டமைப்பு வாயிலாக இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் வாயிலாக பகுயோ நகர் சுற்றுச்சுழல், குடியிருப்பு மேலாண்மை அலுவலகத்திற்கு வழிகாட்டியாக இண்டா வாட்டர் நிறுவனம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 12 மாத கால அவகாசத்திற்கு Indah Water நிறுவனம் அந்த அலுவலகத் தரப்புக்கு வழிகாட்டியாகச் செயல்படும். சிறந்த கொள்கை, நிபுணத்துவம், தொழில்நுட்பப் பரிமாற்ற நடவடிக்கைகளை எளிதாக்க இந்தக் கூட்டமைப்பு வகைசெய்கின்றது. இந்நிலையில் நேற்று இது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒப்பந்தம் கையெழுத்தானது.


Indah Water நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கனிமவள, சுற்றுச்சுழல், பருவமாற்றுத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் சிங் து முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Indah Water நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நரேந்திரன் மணியம், ஏடிபி நகர் – நீர் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தின் வியூக – கூட்டமைப்பு இயக்குநர் சதோஷி இஷி, பகுயோ மேயர் பெஞ்சமின் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்தக் கூட்டமைப்பை மேற்கொள்வதற்கு நாங்கள் பெருமைகொள்கிறோம். உள்நாடு மட்டுமல்லாது பிராந்திய அளவில் தூய்மைப் பணிகளுக்கான கட்டமைப்புகளை தரம் உயர்த்துவதில் எங்கள் பொறுப்புடைமைக்கு ஏற்ப இந்தக் கூட்டமைப்பு அமைந்துள்ளது.

எங்களின் (Indah Water நிறுவனம்) நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளவும் பகுதிவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை வலுப்படுத்தவும் இதுவொரு நல்ல வாய்ப்பாகக் கருதப்படுகிறது என்று நரேந்திரன் குறிப்பிட்டார்.

இதனிடையே இந்த பகுயோ நகர் மணிலாவில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தப் பகுதி பிலிப்பைன்சின் வெயில் கால தலைநகரம் என அழைக்கப்படுகின்றது. புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் என்ற முறையில் இந்த நகர் அரசாங்கம் சுற்றுச்சூழல் கட்டமைப்பு, வலுவான மேம்பாட்டின் மீது அக்கறை கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here