விபத்தில் சிக்கி பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகர் டிரீட் வில்லியம்ஸ். இவர் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது ஒரு கார் மீது அவரது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் டிரீட் வில்லியம்ஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

‘தி ஈகிள் ஹாஸ் லேண்டட்’ ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா’, ‘தி லேட் ஷிப்ட்’, ‘127 ஹவர்ஸ்’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். ஏராளமான தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்து இருக்கிறார். டிரீட் வில்லியம்ஸ் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here