ராமேஸ்வரி ராஜா – தி. மோகன்
இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் 5 லட்சம் பேரை சந்தாதாரர்களாகக் கொண்டு வர வேண்டும் என்ற தமது அமைச்சின் இலக்கு 95 விழுக்காட்டை எட்டிவிட்டதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார். கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை இத்திட்டத்தின் வழி 4 லட்சத்து 74,982 பேர் இதற்கான சந்தாவைச் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு இறுதிக்குள் இத்திட்டத்தின் வழி போதிய அளவிலான சந்தாதாரர்களைச் சேர்க்கும் அதேவேளையில் இல்லத்தரசிகளுக்கான பாதுகாப்புத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு தமது அமைச்சு திட்டம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்தில் கணவர் மூலமாகவோ இல்லத்தரசிகள் சுயமாகவோ குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ அல்லது மூன்றாம்தரப்பினர் மூலமாகவோ இதற்கான சந்தா செலுத்த முடியும் என அவர் கூறினார்.
கடந்த ஆகஸ்டு 31ஆம் தேதி வரை இத்திட்டத்தின் வழி 1,480 இழப்பீடுகளுக்கு 27 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக நேற்று செந்தூல் பெர்டானா சமூக மையத்தில் மனிதவள அமைச்சு அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் பெர்கேசோவின் தீபாவளி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசோப், பெர்கேசோ வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், அதன் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஸிஸ் முகமட் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இல்லத்தரசிகளுக்காக கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் வழி மாதம் ஒன்றுக்கு 10 ரிங்கிட் சந்தா செலுத்தி பெர்கேசோ நிறுவனத்தின் பல்வேறு பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதனிடையே சொந்த வேலை செய்யும் தனிநபர்களுக்கு சொக்சோ பாதுகாப்புத் திட்டத்தை வழங்குவதற்கு அரசாங்கம் எஸ்பிஎஸ் மடானி, எஸ்பிஎஸ் படானான் சாருமான் திட்டத்தின் கீழ் 86.2 மில்லியன் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ரிங்கிட்டை மானியமாக இவ்விரண்டு திட்டங்களும் இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்ற அவர், சொந்தமாகத் தொழில்புரியும் 20 துறைகளுக்கு இத்திட்டம் திறந்து விடப்படும் எனவும் தெரிவித்தார்.
இம்மாதம் 4ஆம் தேதி வரை சொந்தத் தொழில் புரியும் 697,787 தனிநபர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளதாகக் கூறிய அவர், இத்திட்டத்தின் கீழ் 4,052 பேர் இழப்பீடுகளைக் கோரியுள்ளனர் என்றார். அவர்களுக்கு 19.2 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாக வழங்குவதற்கு பெர்கேசோ பரிசீலித்து வருவதாகவும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பெர்கேசோ நிறுவனத்தின் மூலம் மனிதவள அமைச்சு ஆதரவற்ற குழந்தைகள், தனித்து வாழும் தாய்மார்கள் என 140 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கியதோடு 14 பேருக்கு பெர்கேசோ இழப்பீடாக 118,000 ரிங்கிட்டை வழங்கியது.
இதனிடையே நாட்டிலுள்ள 7 அரசாங்க சார்பற்ற நிறுவனங்களுக்கு 70 ஆயிரம் ரிங்கிட் சமூகநல நிதியாக வழங்கப்பட்டது.




















