மாற்றான் மனைவியை வற்புறுத்தி, உல்லாசமாக இருந்ததாக DBKL மூத்த அதிகாரி மீது குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு ஒரு திருமணமான பெண்ணை தன்னுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்திய குற்றச்சாட்டில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் (DBKL) மூத்த அதிகாரி ஒருவருக்கு எதிராக இன்று கோலாலம்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

DBKL நிர்வாக இயக்குனர் (மேலாண்மை), கைருல் அனுவார் முகமட் ஜூரி, 49, என்பவர் 37 வயதுடைய இன்னொருவரின் மனைவியை தன்னுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் தனக்கு எதிரான குற்றச்ச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

குற்றச்சாட்டின்படி, நான்கு பிள்ளைகளின் தந்தையான அவர், திருமணமான பெண்ணை தன்னுடன் உடலுறவு கொள்ளும் நோக்கத்துடன் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 498 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கைருல் அனுவாரை ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM4,000 பிணையில் விடுவிக்க மாஜிஸ்திரேட் நூருல் இஸ்ஸா ஷஹாருதின் அனுமதித்தார், மேலும் வழக்கை மீண்டும் செவிமடுக்கல ஜூலை 26-ஆம் தேதியை நிர்ணயித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here