மெர்டேக்காவை முன்னிட்டு நடத்தப்பட்ட போக்குவரத்து நடவடிக்கை; 8 மோட்டார் சைக்கிள்கள் அம்பாங் போலீசாரால் பறிமுதல்

கோலாலம்பூர்:

மெர்டேக்காவை முன்னிட்டு அம்பாங் ஜெயாவில் புதன்கிழமை (ஆகஸ்ட் 30) மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, எட்டு மோட்டார் சைக்கிள்களை அம்பாங் போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதன்கிழமை இரவு 9 மணி முதல் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நள்ளிரவு 12.30 மணி வரை இந்த சிறப்பு குற்றத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் அசாம் இஸ்மாயில் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

“குறித்த நடவடிக்கைகளின் விளைவாக, சாலையில் ஆபத்தான முறையில் பயணித்த எட்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆவணப்படுத்தல் நோக்கங்களுக்காக அம்பாங் ஜெயா போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டன” என்றார் அவர்.

மேலும் “செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் நம்பர் பிளேட் மீறல்கள் உட்பட பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக மொத்தம் 55 சம்மன்கள் விதிக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

தாமான் கென்கானா பகுதியிலும், ஜாலான் அம்பாங், ஜாலான் புத்ரா மற்றும் சுங்கை பீசி-உலு கெலாங் நெடுஞ்சாலை (SUKE) ஆகியவற்றிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சாலையைப் பயன் படுத்துபவர்கள் சட்ட த்திற்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து அமலா க்க நடவடிக்கைகள் அவ்வப்போது இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here