நடைபெறவிருக்கும் பினாங்கு மாநிலத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக கெராக்கான் தலைவர் டத்தோ டொமினிக் லாவ் உறுதிப்படுத்தினார்.
செபராங் பிறையில் உள்ள மாநில இருக்கைகளில் ஒன்றில் தான் நிற்க விரும்புவதாக லாவ் கூறினார்.
இன்று பினாங்கு கெராக்கான் ஆண்டு பிரதிநிதிகள் மாநாட்டை தொடங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகு நான் எனது தொகுதியை அறிவிப்பேன்” என்றார்.
மேலும் கருத்து தெரிவித்த லாவ், விரைவில் நடைபெறவுள்ள ஆறு மாநிலங்களை உள்ளடக்கிய மாநில தேர்தல்களில், பெரிகாத்தான் நேஷனல் (PN) இன் உறுப்புக் கட்சிகள் பினாங்கு, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் கெடா ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டுமே போட்டியிடுகின்றன என்றார்.