மாநில தேர்தல் : பிரச்சாரத்துக்கு அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படாது – டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன்

நெகிரி செம்பிலானின் மந்திரி பெசார் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த பிறகு, தங்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களை மாநில அரசாங்கத்திடம் திருப்பித் தருவார்கள் என்று டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்துள்ளார்.

சில உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதைத் தவிர, பிரச்சார காலத்தில் அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்த மாட்டார்கள் என்று மந்திரி பெசார் கூறினார்.

“நாங்கள் உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்யும்போது காபந்து அரசாங்கமாக இருப்போம், மேலும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வதற்கான உத்தியோகபூர்வ செயல்பாடுகளைக் கொண்டுள்ளனர். எனவே, கடைசி நாள் வரை நாங்கள் வாகனங்களைப் பயன்படுத்த அனுமதி உள்ளது.

“உத்தியோகபூர்வ பணிகளுக்கு அரசு வாதங்களை பயன்படுத்துவது எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் நாங்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்த மாட்டோம்,” என்று அவர் இன்று நடந்த மாநில சட்டமன்ற கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜூன் 28 அன்று நெகிரி செம்பிலான் ஆளுநர் மாண்புமிகு துவாங்கு முஹ்ரிஸ் இப்னி அல்மர்ஹூம் துவாங்கு முனாவிருடன் கலந்தாலோசித்து , அவரின் சம்மதத்தைப் பெற்றால், நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஜூன் 30 ஆம் தேதி கலைக்கப்படும் என்றும் அமினுடின் முன்னர் கூறியிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here