(கவின்மலர்)
தொழிற்சங்கங்களில் உறுப்பியம் பெற்றுள்ள உறுப்பினர் எண்ணிக்கையை 8 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்துவதற்கு பேராக் மாநில அரசு அடுத்த மூன்றாண்டுகளில் சில செயல் திட்டங்களை முன்னெடுக்கும் என்று மாநில சுகாதாரம்,மனித வளம்,ஒற்றுமை, இந்தியர் விவகாரம் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
பேராக் மாநிலத்திலுள்ள கிட்டத்தட்ட 11 லட்சம் தொழிலாளர்களில் 1 லட்சத்து ஆயிரத்து 523 பேர் மட்டுமே தற்போது தொழிற்சங்கங்களில் உறுப்பியம் பெற்றுள்ளனர். இது கிட்டத்தட்ட 9.22 விழுக்காடு மட்டுமே.இதனை அடுத்து வரும் மூன்றாண்டுகளில் 25 விழுக்காடாக உயர்த்த மாநில அரசு சில திட்டங்களை வகுத்துள்ளது. அவற்றில் குறிப்பாக தொழிற்சங்கங்களை அமைக்கும் நிர்வாகங்களின் முதல் ஆறு மாத செலவினங்களைச் சமாளிக்க மாநில அரசு தலா ஐயாயிரம் ரிங்கிட்டை உதவி நிதியாக வழங்கும்.
அதோடு தொழிற்சங்கங்களை அமைப்பதற்கான வழி காட்டுதல்களையும் தமது அலுவலகம் வழங்கும்.இத்தகைய திட்டத்தை மத்திய அரசாங்கமோ மற்ற மாநில அரசாங்கமோ செய்யாத நிலையில் பேராக் மாநில அரசு முன்னோடியாக திகழ்வதாக சிவநேசன் தெரிவித்தார்.




















