41 ஆண்டுகளுக்குப் பிறகு DAP கட்சியிலிருந்து விலகுகிறார் ரோனி லியு

சுங்கை பீலெக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு நாளை (ஜூன் 24) முதல் DAP-யில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

DAP -யின் மத்திய செயற்குழு உறுப்பினராக இருக்கும் அவர், 1982 இல் அவர் மேல்நிலைப் பள்ளி மாணவராக இருந்தபோது கட்சியில் சேர்ந்ததில் இருந்து 41 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்ததாகவும் கூறினார்.

இந்நிலையில் கட்சியில் பல விஷயங்கள் நடந்ததாகவும், சில தனது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவை என்றும், தனது DAP மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிக்காலம் 2025 இல் முடிவடைய இருந்தாலும், நாளை 24 ஜூன் 2023 முதல் DAP உடனான எனது உறுப்பினரை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று, நேற்றிரவு தனது முகநூல் பக்கத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோகேக்கு மலாய் மொழியில் எழுதிய ஒரு திறந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

அத்தோடு பல ஆண்டுகளாக தனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு DAP கட்சிக்கு நன்றி தெரிவித்தார்.

அதன்பிறகு பல பதிவுகளில், “பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தை நான் தொடர்ந்து ஆதரிப்பேன்” என்று அவர் சீன மொழியில் எழுதியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here