மாலையும் கழுத்துமாக மோடி.. எகிப்தில் இவர்தான் முதல் இந்தியராம்

கெய்ரோ: எகிப்து நாட்டுக்கு முதல் தடவையாக அரச முறை பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தி நைல் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு இருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு வட ஆப்பிரிக்க நாடான எகிப்துக்கு நேற்று சென்றார். எகிப்துக்கு முதல் முறையாக அரசு முறை பயணம் மேற்கொண்டு இருக்கும் அவர் 2 நாட்கள் அங்கு தங்குகிறார்.

நேற்று கெய்ரோ விமான நிலையத்துக்கு வந்தடைந்த அவரை எகிப்து பிரதமர் முஸ்தபா மத்தவுலி நேரில் வரவேற்றார். அதை தொடர்ந்து எகிப்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியினரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அதன் பின்னர் சிறுது நேரம் அவர்கள் மத்தியில் மோடி உரை நிகழ்த்தினார்.

அதன் பின்னர் எகிப்து பிரதமர் முஸ்தபா மத்தவுலியுடனான வட்டமேசை மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மேலும் கெய்ரோ நகரில் அமைந்து இருக்கும் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மிகவும் பழமைவாய்ந்த அல் ஹகீம் என்ற மசூதிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார். அதை தொடர்ந்து போரா பிரிவு மக்களிடமும் அவர் கலந்துரையாடினார்.

அதன் தொடர்ச்சியாக முதலாவது உலகப் போரின்போது எகிப்து நாட்டிற்காக போரிட்டு உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்காக கட்டப்பட்ட ஹீலியோபோலிஸ் என்ற போர் கல்லறைக்கு நேரில் சென்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து எகிப்து நாட்டின் அதிபர் அல் சிசியை சந்தித்து பேசிய மோடி, இந்திய குழுவினரையும் அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த விருதை பெரும்போது பிரதமர் நரேந்திர மோடி கழுத்தில் மாலை போன்ற ஒன்றை அணிந்து இருந்தார். கிலாதத் எல் நைல் என்று எகிப்து மக்களால் அழைக்கப்படும் இந்த விருது 1915 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதாகும். 1953 ஆன் ஆண்டுக்கு முன் எகிப்தில் மன்னராட்சி இருந்தபோது சுல்தான் ஹுசைன் காமிலால் இது அறிமுகம் செய்யப்பட்டதாகும்.

நாட்டுக்கு உயரிய சேவைகளை செய்தவர்களுக்காக அப்போதைய மன்னர்களால் வழங்கப்பட்டு வந்த இந்த விருது, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டு உள்ளது. 1953இல் எகிப்து குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பிறகும் இந்த விருது நாட்டின் உயரிய விருதாக வழங்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here