இன்று 11 மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – மலேசிய வானிலை ஆய்வு மையம்

நாட்டின் 11 மாநிலங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 2.45 மணிக்கு மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சிக், பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாருவை உள்ளடக்கிய கெடா மாநிலத்தின் பகுதிகள் ; பேராக் ; கிளாந்தான் (குவா மூசாங்) மற்றும் திரெங்கானு (செத்தியூ, குவாலா நெரராஸ், உலு திரெங்கானு, கோலா திரெங்கானு, மராங் மற்றும் டுங்கூன்) ஆகிய இடங்கள் இந்த வானிலையை எதிர்கொள்ளும்.

மேலும் பகாங் (கேமரன் ஹைலேண்ட்ஸ், லிபிஸ், ரவூப், பெந்தோங் மற்றும் ரோம்பின்); சிலாங்கூர் (உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட்); கோலாலம்பூர்; நெகிரி செம்பிலான் (ஜெலேபு, சிரம்பான், குவாலா பிலா மற்றும் ஜெம்போல்) மற்றும் ஜோகூர் (சிகாமாட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி) ஆகிய இடங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சரவாக்கில் இது சிபுவை (கனோவிட் மற்றும் செலாங்காவ்) உள்ளடக்கியது; முக்கா ; கபிட் (சோங், கபிட் மற்றும் புக்கிட் மாபோங்); பிந்துலு, மிரி (சுபிஸ், மிரி மற்றும் மருடி) மற்றும் லிம்பாங் (சிபிடாங், பியூஃபோர்ட் மற்றும் தம்புனான்); வெஸ்ட் கோஸ்ட், தவாவ் (குனாக் மற்றும் லஹாட் டத்து); சபாவில் சண்டாக்கான் (டோங்கோட், டெலுபிட், கினாபடங்கான் மற்றும் பெலூரன்) மற்றும் குடாட் (கோத்தா மருது மற்றும் பிடாஸ்) ஆகிய இடங்களிலும் இரவு 7 மணிவரை இந்த காலநிலை நிலவும் என்று அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here