திரெங்கானுவில் தீ பரவக்கூடிய 10 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கோல திரெங்கானு:

ரும் ஏப்ரல் மாதத்தில் நிலவும் என எதிர்பார்க்கப்படும் வெப்பமான காலநிலையின் போது, காட்டுத் தீ ஏற்படும் அபாயம் உள்ளதாக திரெங்கானுவில் உள்ள நான்கு மாவட்டங்களில் மொத்தம் 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கம்போங் ஜம்பு பாங்காக், கம்போங் கெலுலூட் மற்றும் டுங்கூனில் உள்ள ரந்தாவ் அபாங் ஆகிய இடங்கள் உட்பட கம்போங் தெலகா பாப்பான், லெம்பா பிடோங், கம்போங் சௌஜானா மற்றும் செத்தியூவில் உள்ள கம்போங் மெராங்; கோலா நெருஸில் உள்ள கம்போங் தோக் ஜெம்பல், கம்போங் கோங் படாக் மற்றும் கம்போங் பத்து ராகிட் ஆகிய இடங்களில் தீ ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று, மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் ஹசான் ‘அசாரி உமர் கூறினார்.

“இந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் தொடங்கி, 9 முதல் 12 மாதங்களுக்கு இடையில் நீடித்த வெப்பமான வானிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று, இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 5) தீயணைப்பு துறையின் தலைமையகத்தில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

மேலும் கடந்த ஆண்டு முழுவதும் 225 புதர் மற்றும் காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஹசான் அஸ்ரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here