நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகருகின்றன

வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மற்றும் கோலாலம்பூர் காராக் விரைவுச்சாலையின் பல்வேறு பிரிவுகளில் போக்குவரத்து இன்று மாலை மெதுவாக இருந்தது.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின்படி, சுங்கை பீசி டோல் பிளாசாவிலிருந்து புசாட் பண்டார் செனாவாங் மற்றும் போர்ட்டிக்சன் நோக்கி செல்லும் சாலையில் போக்குவரத்து மிகவும் மெதுவாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

புத்ரா மஹ்கோத்தாவிலிருந்து நீலாய் நோக்கிய தெற்கு வழிப் போக்குவரத்து அதிக நெரிசலாக இருப்பதாகவும் அது கூறியது.

இதற்கிடையில், விரைவுச்சாலையின் வடக்குப் பகுதியில், விபத்து காரணமாக மெனோரா சுரங்கப்பாதையில் இருந்து சுங்கை பேராக் ஓய்வு பகுதி நோக்கி போக்குவரத்து மெதுவாக உள்ளது.

ஜாவியிலிருந்து பண்டார் காசியா வரையிலும், ஜூருவிலிருந்து பிறை வரையிலும் போக்குவரத்து மெதுவாக நகர்கிறது என்றும் அது தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், திகாம் பத்து ஓய்வு பகுதியிலிருந்து பெர்தம் மற்றும் பெர்மாடாங் பாவ் முதல் பிறை வரை தெற்கு நோக்கிய போக்குவரத்தும் மெதுவாக வே நகருகிறது.

கோம்பாக் டோல் பிளாசாவிலிருந்து கிழக்கு நோக்கிய கோலாலம்பூர் காராக் விரைவுச்சாலையிலும் போக்குவரத்து மெதுவாக இருந்தது.

இதற்கிடையில்
புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர், ஆணையர் டத்தோ மாட் காசிம் கரீம் கூறுகையில், வாகன ஓட்டிகள் தங்களை, தங்கள் குடும்பத்தினர் மற்றும் பிற வாகன ஓட்டிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க போக்குவரத்து விதிகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

“போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, உங்கள் பயணத்தை கவனமாக திட்டமிடுங்கள் மற்றும் உங்கள் பயணத்தின் போது மற்ற சாலை பயனர்களுடன் மரியாதையுடனும் ஒத்துழைப்புடனும் இருங்கள்.

மேலும் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, வாகன ஓட்டிகள் தங்கள் முழு கவனத்தையும் சாலையில் செலுத்தி, வாகனம் ஓட்டும்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here