கோலால்ம்பூரில் 1,286 மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு சம்மன்

கோலாலம்பூர் , ஜூலை 4-

ஹஜ் பெருநாளை முன்னிட்டு தலைநகரில் சாலைப் போக்குவரத்து இலாகா மேற்கொண்ட மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கையின்போது பல்வேறு குற்றங்களுக்காக 1,286  மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு சம்மன் சார்வு செய்யப்பட்டதாக கோலாலம்பூர் சாலை போக்குவரத்து இலாகாவின் துணை இயக்குநர் ஏரிக் ஜூசியாங் கூறினார்.

மோட்டார் சைக்கிளோட்டும் லைசென்ஸ் இல்லாதது, சாலை வரியைப் புதுப்பிக்காதது ஆகிய இரண்டு குற்றங்களே அவர்கள் அதிகமாகப் புரிந்துள்ளனர் எனவும் அவர் சொன்னார்.

ஜூன் மாதம் 27,28ஆம் தேதிகள்  உட்பட ஜூலை 1, 2ஆம் தேதிகளிலும் இந்தச் சிறப்புச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வும் அவர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளோட்டும் லைசென்ஸ் இல்லாத காரணத்திற்காக 535 பேருக்கும் சாலை வரி புதுப்பிக்காத காரணத்திற்காக 237 பேருக்கும் சம்மன் சார்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதனைத் தவிர்த்து, காப்புறுதி இல்லாததற் காக 204 பேருக்கும் சரியான முறையில் எண் பட்டைகளைப் பொருத்தாதற்காக 115 பேருக்கும் பக்கவாட்டு கண்ணாடி இல்லாத குற்றத்திற்காக 58 பேருக்கும் சம்மன் சார்வு செய்யப்பட்டதாக நேற்று ஜாலான் பஹாங்கில் மேற்கொள்ளப் பட்ட சோதனை நடவடிக்கை யில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சாலை வரியை வாகனங்களின் மேற்பார்வைக்கு வைக்கப்பட வேண்டிய தில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளப் போதிலும் நாட்டிலுள்ள வாகன உரிமையாளர் கள் தங்களின் வாகனங்களுக்கான சாலை வரியை அவசியம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இச்சோதனையில் குடிநுழைவுத்துறையின ரும் பங்குகொண்ட தால், பல்வேறு குற்றங்களுக்காக 23 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட 70 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here