புத்ராஜெயா: சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கிளந்தான், தெரெங்கானு மற்றும் கெடா ஆகிய ஆறு மாநிலங்களில் வரும் மாநிலத் தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் வாக்குப்பதிவு தேதிகளை நிர்ணயம் செய்ய தேர்தல் ஆணையம் (EC) இப்போது சிறப்புக் கூட்டத்தை நடத்துகிறது.
தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் EC துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷரோம், செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக், EC உறுப்பினர்கள் ஜோய் ரந்தாவா, டாக்டர் முகமட் பைசல் சியாம் அப்தோல் ஹாசிஸ், டத்தோ நிக் அலி மாட் யூனுஸ் மற்றும் டத்தோ டாக்டர் லீ பீ பாங் மற்றும் மூத்த EC அதிகாரிகள் உள்ளனர்.
கடந்த நவம்பரில் 15ஆவது பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதோடு, மாநில சட்டசபைகளையும் கலைக்காததால், இந்த ஆறு மாநிலங்களும் விரைவில் தங்கள் மாநிலத் தேர்தலை நடத்தும்.







