ஜெண்டேலா மலேசியாவில் இலக்கவியல் உருமாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது

கோவிட்-19 தொற்றுநோய் நம் வாழ்க்கையை மீண்டும் இணைய, இலக்கவியலுக்கு கட்டமைத்துள்ளது. எனவே, அதன் ஆயுள், இணைய சேவையின் திறன் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தேசிய இலக்கவியல் தொடர்புத் திட்டம் அல்லது ஜெண்டேலா திட்டம் கடந்த 2020 ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு வலுவான, உயர்தர, மலிவான இலக்கவியல் இணைப்பை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டது. இணையத்தின் தரம், சேவையை மேம்படுத்துதல் உட்பட நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் இணைய அணுகலை வழங்குதல் இதன் பிரதான நோக்கமாக இருந்தது.

ஜெண்டேலா திட்டம் 90 லட்சம் வளாகங்களைப் பயன்படுத்தி இணையச் சேவையை இணைக்கவும் 100% மக்கள்தொகை கொண்ட பகுதிகளுக்கு 4ஜி சேவையை விரிவுபடுத்தவும் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இணையச் சேவை வேகத்தை 100 எம்.பி.பி.எஸ் ஆக அதிகரிக்கவும் இலக்கு கொண்டுள்ளது.

நிலப்பரப்பு, சுற்றுச்சூழல் சவால்களை சமாளிக்க முதலாவது திட்டம் (2020 – 2022) ஆண்டில் முடிந்தது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அதன் ஆரம்ப இலக்கை தாண்டி 7.74 மில்லியன் வளாகங்களைக் கடந்து சென்றது. மக்கள் தொகை அதிகம் கொண்ட 96.92 % பகுதிகளில் 116.03 எம்.பி.பி.எஸ். வேகம் கொண்ட 4ஜி இணையச் சேவை வழங்கப்பட்டது.

இது 2 ஆம் திட்டத்திற்கு (2023 – 2025) வழி வகுக்கும் என்பதோடு நாடு முழுவதும் 5ஜி இணையச் சேவையின் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்தும். நெகிரி செம்பிலானிலுள்ள உலு லங்காய் பூர்வீகக் குடியினர் பகுதி, கேரித்தீவிலுள்ள சுங்கை ஜூடா பூர்வீகக் குடியினர் பகுதி போன்ற கிராமப்புற, தொலைதூரப் பகுதிகளில் கைப்பேசி பயன்பாட்டை மேம்படுத்த 839 துணைக்கோளங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

குறைந்த மக்கள் தொகை கொண்ட தொலைதூரப் பகுதிகளில் இணைய இணைப்புச் சவால்களைச் சமாளிக்க இது ஆக்கப்பூர்வமான, விரைவான இடைக்காலத் தீர்வாகும். சிறந்த இணைப்பு முறைகள் கிடைப்பதற்கு இணைப்புச் சவால்களை எதிர்கொள்வதற்காக 5ஜி இணையச் சேவை கட்டம் 2லிருந்து கட்டம் ஒன்றுக்கு கொண்டு வரப்பட்டது.

2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி சைபர்ஜெயா, புத்ராஜெயா, கோலாலம்பூர் உள்ளிட்ட 3,906 இடங்களைக் கொண்ட மக்கள் தொகை கொண்ட 47.1% பகுதிகளில் 5ஜி இணையச் சேவை கிடைக்கிறது. இதில் ஜோகூர், பினாங்கு, மலாக்கா, நெகிரி செம்பிலான், கிளாந்தான், பேராக், பெர்லிஸ், பகாங், சபா, சரவாக் ஆகிய இடங்களில் உள்ள சில பகுதிகளும் அடங்கும்.

முதலாவது திட்டத்தில் கடந்த 2022ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 3ஜி ஙே்வை நிறுத்தம் கண்டது. இது 4ஜி இணையச் சேவை செயல்திறனை மேம்படுத்துவதற்காக 3ஜி இணையச் சேவை மீண்டும் உருவாக்கப்படுவதை செயல்படுத்தியது. இது மேம்பட்ட திறன், தரவு வேகம், இணையச் ஙே்வை கொண்ட அனைத்து பயனீட்டாளர்களுக்கும் சிறந்த அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
நாட்டில் இலக்கவியல் உள்கட்டமைப்பை உருவாக்குவது ஜெண்டேலாவின் முக்கிய நோக்கமாக இருக்கும் அதே வேளையில், வாடிக்கையாளர்களின் அனுபவத்தின் தரம் சமமாக இருப்பதும் முக்கியமாகும்.

இணையம், செயலியில் கிடைக்கும் ஜெண்டேலாவின் வரை படம், பயனீட்டாளர்கள் நிலையான கம்பியில்லா இணையச் சேவை, பின்னூட்டங்களைச் சரிபார்ப்பதோடு, அவர்களின் கருத்துகளை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்திடம் தெரிவிக்கும் அதேவேளையில், அவற்றுக்குப் பதில் பெறுவதற்குபான ஒரு தளமாகும்.
தொலைத்தொடர்பு சேவைகள், சேவைத் திறன் குறித்து சேவை வழங்குபவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழிகாட்டுதலைத் தெரிவிப்பதற்கு இது ஒரு சுதந்திரமான தகவல் அமைப்பாகும். எந்தச் சேவை வழங்குபவரால் சிறந்த சேவையை வழங்க முடியும் என்பது மீதான தகவலை அறிந்த பின்னர் பொதுமக்கள் அதுகுறித்து முடிவு எடுக்க முடியும்.

முன்னேறுதல்

இணைய இணைப்புக்கான சேவை தனிநபர்களின் வாழ்க்கை முறைக்கும் வணிகங்களுக்கும் இணையச் சேவையை ஏற்படுத்தும் என்பதோடு போட்டித்தன்மையையும் உருவாக்கும். கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய, ஜெண்டேலாவின் முயற்சிகள் சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் குறிக்கோளுடன் இலக்கவியல் பிரிவைக் குறைத்ததுடன், இருப்பிடம், சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மலேசியர்களுக்கும் இலக்கவியல் மாற்றத்தை வலுப்படுத்தியது.

இப்போது அதிகமான மலேசியர்கள் இணையத்தில் உலா வருவது, செய்திகளை அனுப்புவது, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது, வீடியோக்களைப் பகிர்வது உட்பட இதர இணையச் சேவைகளை அனுபவிக்க முடியும்.வணிகங்களைப் பொறுத்தவரை, இது இலக்கவியல் மாற்றத்தை மேலும் விரைவுபடுத்தியுள்ளது. இது அதிக போட்டி நிறைந்த சூழலை மேலும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
2ஆம் கட்டத்திற்கு (2023 – 2025), இணைய சேவைப் பகுதிகளை அதிகப்படுத்தி, பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இலக்கவியல் உள்ளடக்கம் உட்பட பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. 4ஜி, 5ஜி, துணைக்கோளம் போன்றவை அதிக வேகம், அதிக நம்பகத்தன்மையுடன் இணைப்பை வழங்கும்.

இணைய இணைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் சிறந்த, வேகமான சேவையுடன் உலகை இணைக்க புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி வருகின்றன. எனவே, 12ஆவது மலேசியத் திட்டம், தேசிய நான்காவது தொழில் புரட்சி (4ஐஆர்) கொள்கைகளின் இலக்குகளை அடைவதற்கு இது இன்றியமையாததாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here