கார் பூத்தில் இருந்த ஆடவரின் சடலம் தொடர்பில் மேலும் 7 பேர் கைது

ஷா ஆலம், தாமான் ஸ்ரீ ஆர்க்கிட் அருகே கடந்த செவ்வாய்கிழமை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் பூத்தில் கருப்பு பிளாஸ்டிக் தாளில் கட்டப்பட்டு, சுற்றப்பட்ட நிலையில் இந்தோனேசிய ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான விசாரணையில் உதவ மேலும் 7 சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்தோனேசியர்களான சந்தேக நபர்கள் அனைவரும் இன்று முதல் 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்படுவர் என்று ஷா ஆலம் துணை காவல்துறைத் தலைவர் ராம்சே அனாக் எம்போல் தெரிவித்தார்.

சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக இந்தோனேசிய பெண் உட்பட நான்கு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்ததாக பெர்னாமா முன்னர் தெரிவித்திருந்தது.

சந்தேகநபர்கள் அனைவரும் ஜூலை 10 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவார்கள், அதே நேரத்தில் இந்த சம்பவம் பொறாமை காரணமாக நடந்ததாக நம்பப்படுகிறது.

பல நாட்களாக அந்த இடத்தில் இருந்ததாகக் கூறப்படும் கறுப்பு நிற ஹோண்டா சிட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் கவனித்ததை அடுத்து, சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here