பினாங்கு மாநிலத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் PH-BN இடையில் எந்த பிரச்சினையும் இல்லை

வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு குறித்து, தேசிய முன்னணி (BN ) மற்றும் நம்பிக்கை கூட்டணி (PH ) ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பினாங்கு நம்பிக்கை கூட்டணி தலைவர் சோவ் கோன் இயோவ் தெரிவித்தார்.

மாநிலத்தில் தங்கள் வெற்றியை உறுதி செய்வதற்காக “இட ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்க நாங்கள் பல கூட்டங்களை நடத்தியுள்ளோம். இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை, ஒரு இடம் மட்டும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால் அதுவும் இரு கட்சிகளின் தலைவர்களால் விரைவில் தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன்.

“பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் விரைவில் முடிவை அறிவோம்” என்று அவர் கூறினார்.

கொள்கையளவில், DAP அதன் தற்போதைய 19 இடங்களில் போட்டியிடும் என்று தற்போது காபந்து முதல்வராகராக இருக்கும் சோ கூறினார்.

கட்சி இப்போது வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் கட்டத்தில் இருப்பதாகவும், இதுவரை 30 வேட்பாளர்களை நேர்காணல் செய்துள்ளதாகவும் கூறிய அவர், இம்மாநிலத் தேர்தலுக்கு கட்சி யாரையும் ‘போஸ்டர் பாய்’ ஆகக் காட்டாது என்றார்.

பினாங்கு, கெடா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் (EC) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here