நேற்று இஸ்கண்டார் புத்டதிரி மற்றும் வட ஜோகூர் பாருவைச் சுற்றியுள்ள 13 இடங்களில், ஒரே நேரத்தில் மேற்கொண்ட நடவடிக்கையில், உரிமம் இன்றி பணம் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 15 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், 12 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்கிய 22 முதல் 43 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களை வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டதாகவும் ஜோகூர் காவல்துறைத் தலைவர், டத்தோ கமாருல் ஜமான் மாமட் கூறினார் .
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர்கள் அனைவரும் ஆ ஹாவ் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
“இவர்கள் வீடுகளுக்கு பெயிண்ட் அடித்து, வாகனங்கள் மற்றும் வீடுகளை எரித்து அச்சுறுத்தும் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்,” என்று, அவர் ஜோகூர் காவல் படைத் தலைமையகத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் கார் சாவிகள், பல்வேறு பிராண்டுகளின் 44 கைத்தொலைபேசிகள், பல்வேறு வங்கிகளின் 22 ஏடிஎம் கார்டுகள், பல்வேறு பிராண்டுகளின் 5 மடிக்கணினிகள், பல்வேறு நிறுவன பெயர்கள் கொண்ட 4 முத்திரைகள், கடன் தொடர்பான ஆவணங்கள் மற்றும் இரண்டு மாத்திரைகள், 19 பெட்டிகள் மற்றும் பல்வேறு வகையான 7 வாகனங்கள் என்பான் பறிமுதல் செய்யப்பட்டன.
1951 ஆம் ஆண்டு பணக்கடன் வழங்குபவர்கள் சட்டம் பிரிவு 5(2) இன் படி மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர்கள் அனைவரும் இந்த ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








