மலாக்கா தாமான் மெர்டேக்கா ஜெயாவில் உள்ள கடைவீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் புதன்கிழமை பிற்பகல் இரத்த வெள்ளத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டபோது, ஒரு ஊழியர் வேலைக்கு வராதததால் காணாமல் போனதாக நம்பப்பட்டது. ஆனால் தற்பொழுது பின்னணியில் உள்ள மர்மம் தீர்க்கப்பட்டது.
நேபாளத்தைச் சேர்ந்த 32 வயதான நபர், கழிவறையில் சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு முன்பு அவரது சக ஊழியரால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
மாலை 6.42 மணியளவில் ஒரு ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகவும், போலீஸ் பணியாளர்கள் மற்றும் தடயவியல் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் மலாக்கா தெங்கா போலீஸ் தலைமை உதவி ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.
உணவக உதவியாளராகப் பணியாற்றிய பாதிக்கப்பட்டவர், சம்பவத்தன்று வேலைக்கு வரவில்லை. இதனால் அவரைத் தேடுவதற்காக அவரது முதலாளி தொழிலாளர்கள் தங்குமிடத்திற்குச் சென்றதாக அவர் கூறினார்.
உடல் வளாகத்தில் உள்ள கழிப்பறையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவரின் உடலுக்கு அருகில் ஒரு மரத்துண்டு மற்றும் தொலைபேசி கேபிள் ஆகியவற்றைக் கண்டோம்.
எங்கள் சோதனைகளைத் தொடர்ந்து, நேபாளத்தைச் சேர்ந்த 20 வயதுடைய சந்தேக நபரை, இரவு 11.30 மணியளவில் பெடாஸ் லிங்கியில் உள்ள ஓய்வறையில் நாங்கள் கண்டுபிடித்தோம் என்று அவர் கூறினார்.









