தாய்லாந்தின் பிரதமராகும் முயற்சியில் பிட்டா தோல்வி

தாய்லாந்தின் முன்னேற்றக் கட்சியின் தலைவரான பிட்டா லிம்ஜரோயின்ராட் அடுத்த பிரதமராவதற்குத் தேவையான பெரும்பான்மை ஆதரவைப் பெற வியாழக்கிழமை தவறிவிட்டார்.

நாடாளுமன்றத்தில் நடந்த வாக்களிப்பில் அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. வாக்கெடுப்பு நடந்தபோது கிட்டத்தட்ட 200 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.

தேர்தலில் வெற்றி பெற்ற தாய்லாந்து முன்னேற்றக் கட்சியின் தலைவரான அவருக்குப் பிரதமர் போட்டியில் எதிர்ப்பாளர்கள் யாரும் களத்தில் இல்லை.

இருந்தாலும்கூட மொத்தம் 749 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாதிக்கும் மேற்பட்ட ஆதரவைப் பெற அவர் தவறிவிட்டார்.

திரு பிட்டாவின் எட்டுக் கட்சி கூட்டணியின் ஆதரவு இருந்தபோதும் விரும்பிய வெற்றி அவருக்குக் கிடைக்கவில்லை. அடுத்த வாரம் மற்றொரு வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு பிட்டா அடுத்த பிரதமராகப் பரிந்துரைக்கப்பட்டால் அவர் மீண்டும் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு பிட்டாவின் கூட்டணிக்கு 500 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 312 இடங்கள் இருக்கின்றன. ஆனால், தேவைப்படக்கூடிய 375 வாக்குகளைப் பெறுவதற்கு மேலவையில் போதிய ஆதரவை அவர் பெற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here