போலி RM100 நோட்டுகளை வைத்திருந்த இருவர் கைது

போலி 100 ரிங்கிட் பண நோட்டுகளை வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முதல் சந்தேக நபர் கடந்த புதனன்று ஜோகூரில் உள்ள ஜாலான் டெப்ராவில் கைது செய்யப்பட்டார் என்று, திமூர் லாவூட் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சோஃபியன் சாண்டோங் கூறினார்.

Touch N Go மீள்நிரப்பு கூப்பன்களை வாங்க,குறித்த சந்தேக நபர், குறித்த போலி நாணயத்தாள்களான RM100 நோட்டுகளைப் பயன்படுத்தியதாக, ஜாலான் மக்கலிஸ்டரில் உள்ள ஒரு பலசரக்கு கடையில், துணை மேலாளர் தெரிவித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“ஒரு ரகசிய தகவலின் பேரில், ஜார்ஜ் டவுன் பகுதியில் இரவு 11.30 மணியளவில் முதல் சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர். புக்கிட் மெர்தாஜாமில் உள்ள அவரது வீட்டில் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கைபேசிகள், உடைகள் மற்றும் Touch N Go மீள்நிரப்பு கூப்பன்களின் ஏழு துண்டுகள் உட்பட பல பொருட்களை போலீசா ர் கைப்பற்றினர்.

இன்ஸ்டாகிராமில் நட்பாகப் பழகிய ஒருவரிடமிருந்து 30 போலியான RM100 நோட்டுகளை RM1,000க்கு வாங்கியதாக சந்தேக நபர் விசாரணையில் தெரிவித்ததாக இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, போலி ரிம100 நோட்டுகளை விற்றதாக சந்தேகத்தின் பேரில் ஜோகூரில் இரண்டாவது சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.

குற்றவியல் சட்டத்தின் 489B பிரிவின் கீழ் விசாரணைக்காக சந்தேக நபர்கள் இருவரும் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here